Kogilavani / 2015 டிசெம்பர் 18 , மு.ப. 09:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

வடமலை ராஜ்குமார்
திருகோணமலை லயன்ஸ் கழக நகரக் கிளையினால் நேற்று வியாழக்கிழமை(7) ஊடகவியலாளர் சந்திப்பொன்று நியூ சில்வஸ்டர் ஹோட்டலில் நடத்தப்பட்டது.
இதில், முன்னாள் மாவட்ட ஆளுநர் பா.ஜனரஞசன் மற்றும் லயன்ஸ் கழக நகர கிளையின் தலைவர் வர்த்தகர் ஜேம்ஸ் சமந்தர் மற்றும் செயலாளர் பி.உதயசங்கர் லியோ கழக ஆலோசகர் க.திருச்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது 2015ஆம் ஆண்டில் தாம் மேற்கொண்ட செயற்திட்டங்கள் தொடர்பில் விளக்கமளித்தனர்.
இவ்வாண்டின் மிக முக்கியமான செயற்திட்டமாக, திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு 21 இலட்சம் பெறுமதியான குடல்புற்று நோயை கண்டறியும் கொலனஸ்கொப்பி வழங்கப்பட்டதாக தெரிவித்தனர்.
மேலும் இவ்வருடத்தின் முதியோர் தின நிகழ்வு, கண்பரிசோதனை முகாம், பற்சிகிச்சை முகாம் பாடசாலை மாணவ தலைவர்களுக்கு நடத்திய தலைமைத்துவ பயிற்சிகள் போன்ற தமது பல்வேறு பணிகளையும் இதனால் உட்பட்ட நன்மைகள் பற்றியும் கலந்துரையாடினர்.
இத்துடன் இம்மாதம் 24ஆம் தாம் மேற்கொள்ளவுள்ள கொமரங்கடவெல பிரதேச சபையுடன் இணைந்து கண்சிகிச்சை முகாம் மற்றும் கர்;பிணிப் பெண்களுக்கான பற்சிகிச்சை முகாம் மற்றம் ரொட்டவெலயில் இடம்பெறுள்ள மாணவர் தலைவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சிகள் தொடர்பாகவும் விபரித்தனர்.

10 minute ago
19 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
19 minute ago
29 minute ago