Editorial / 2019 மார்ச் 15 , பி.ப. 02:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீத்,யாசிம்
கொழும்பிலிருந்து- தம்பலகாமம் ஊடாக மூதூர் பிரதேசத்துக்கு, பொருட்களை ஏற்றிச்சென்ற லொறி ஒன்று, தம்பலகாமம் கோணேஸ்வர கோயிலடிக்கு முன்னால், இன்று (15) அதிகாலை 4.00 மணியளவில் குடைசாய்ந்ததில் சாரதி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
லொறியின் டயார் ஒன்று வெடித்ததாலேயே, லொறி குடை சாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில், மூதூர் ஆலீம் நகர் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் தம்பலகாமம் வைத்தியசாலையின், பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், தம்பலகாமம் பொலிஸார், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago