Princiya Dixci / 2021 ஜனவரி 25 , பி.ப. 10:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட், ஏ.எம்.ஏ.பரீட், அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதி 64ஆம் கட்டை பகுதியில் சீமெந்து ஏற்றிச் சென்ற லொறி மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வயோதிபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து, இன்று (25) பிற்பகல் 2.35 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் மூதூர்-தாஹா நகரைச் சேர்ந்த முஹம்மது காசிம் முகம்மது சித்தீக் (70 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம், தற்பொழுது மூதூர் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உள்ளதாக வைத்தியசாலை அதிகாரி தெரிவித்தார்.
விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதியை கைது செய்துள்ளதாகவும் விபத்து தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
12 minute ago
22 minute ago
23 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
22 minute ago
23 minute ago
27 minute ago