Gavitha / 2015 ஒக்டோபர் 10 , மு.ப. 06:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

வி.சுகிர்தகுமார்
திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தால் நடாத்தப்படுகின்ற திவிநெகும பயனாளிகளுக்கிடையிலான வீடமைப்பு அபிவிருத்தி லொத்தர் சீட்டிழுப்பின் மூலம், பொத்துவில் பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட 5 பேருக்கான காசோலைகள் நேற்று வெள்ளிக்கிழமை (09) வழங்கி வைக்கப்பட்டன.
பிரதேச செயலக திவிநெகும தலைமையக முகாமையாளர் என்.கிருபாகரன் தலைமையில், பொத்துவில் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாவட்ட திவிநெகும பணிப்பாளர் அனுருத்த பியதாச, பிரதேச செயலாளர் என்.எம்.எம்.முசாரத் ஆகியோர் கலந்து கொண்டு, ஒருவருக்கு தலா 150,000 பெறுமதியான காசோலைகளை வழங்கி வைத்தனர்.
புதிய வீடுகளை அமைத்தல், வீடுகளின் திருத்த வேலைகளை மேற்கொள்ளல் போன்ற நடவடிக்கைளுக்காக இப்பணத்தை பயன்படுத்த முடியும் என தெரிவித்த தலைமையக முகாமையாளர், இது தொடர்பில் பிரதேச செயலக சமூக அபிவிருத்தி உத்தியோகஸ்தர் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்படுவார் எனவும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வுகளில் , மாவட்ட செயலகத்திலிருந்து வருகை தந்த உத்தியோகஸ்தர்கள், திவிநெகும முகாடையாளர்கள் , அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

8 hours ago
8 hours ago
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
23 Mar 2026
23 Mar 2026