2025 மே 23, வெள்ளிக்கிழமை

வடிசாராயம் காய்ச்சி விற்பனை செய்த பெண்ணுக்கு அபராதம்

Niroshini   / 2016 ஏப்ரல் 18 , மு.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தீசான் அஹமட்

வடிசாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்த 65 வயது பெண் ஒருவருக்கு 15 ஆயிரம் அபராதமாக செலுத்துமாறு மூதூர் நீதிமன்ற நீதிபதி ஜ.என்.றிஸ்வான் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டார்.

திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூதூர் கிழக்கு பகுதியில், வடிசாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்த குறித்தப் பெண்ணை சம்பூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்ணை இன்று திங்கட்கிழமை மூதூர் நீதிமன்ற நீதிபதி ஜ.என்.றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதை அடுத்தே 15,000 ரூபாய் தண்டம் விதித்து உத்தரவிட்டார்.

குறித்த பெண் வடிசாராயம் காய்ச்சி விற்பனை செய்த குற்றச்சாட்டில் இதற்கு முன்னர் 4 தடவைகள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு குற்றவாளியாக இனங்காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X