Niroshini / 2015 நவம்பர் 02 , மு.ப. 08:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

-நஹீம் முஹம்மட் புஹாரி
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளிவெட்டி.பாரதிபுரம் பிரதேசத்தில் சட்டவிரோதமாக வடிசாராயம் விற்பனையில் ஈடுபட்டு வந்த ஒருவருக்கு இன்று திங்கட்கிழமை மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதி 43,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
மூதூர் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த நபரின் வீட்டை சோதனையிட்ட போதே வடிசாராயம் காய்ச்ச பயன்படுத்தப்படும் பொருட்களை பொலிஸார் கைப்பற்றி சந்தேக நபரையும் கைதுசெய்தனர்.
இதேவேளை,மூதூர் பிரதேசத்தில் கஞ்சா வைத்திருந்த ஒருவருக்கு இன்று திங்கட்கிழமை மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதி 9,000 ரூபாய் தண்டம் விதித்து தீர்ப்பளித்தார்
கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த மூதூர் பொலிஸார் குறித்த நபரை கைது செய்ததுடன் அவரிடமிருந்து 60 கிராம் கஞ்சாவையும் கைப்பற்றியுள்ளனர்.
2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago