2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

‘வன்முறையற்ற சமூகத்தை கட்டியெழுப்ப ஒத்துழைப்பு அவசியம்’

Editorial   / 2019 ஜனவரி 30 , பி.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.எம். றனீஸ்

வன்முறையின்மை மற்றும் சமாதானத்துக்கான சர்வதேச பாடசாலை தினத்தை முன்னிட்டு, திருகோணமலை மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு இன்று (30) திருகோணமலை சிறீகோணஸ்வரா இந்து கல்லூரியில் நடைபெற்றது.

வன்முறையால் சமூக, பொருளாதார, சமய மற்றும் கலாசார ரீதியாக பல பாதிப்புக்கள் ஏற்படுவதனால், நாட்டின் நிலைத்த அபிவிருத்தி  கேள்விக்குறியாக மாறிவிடும். எனவே விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, சகிப்புத்தன்மை, மற்றவரது கருத்தை மதித்து செயற்படல் ஆகிய நற்பண்புகளை மாணவர்கள் தமக்குள் ஏற்படுத்திக்கொள்வதன் மூலம் வன்முறையை ஏற்படுவதை தடுக்க முடியுமென்று, கிழக்கு மாகாண பிரதி தேர்தல் ஆணையாளர் எஸ்.சுதாகரன் தெரிவித்தார்.

அத்தோடு, நாட்டின் எதிர்கால தலைவர்களாக மிளிர உள்ள நற்பண்புகளை பாடசாலை வாழ்க்கை முதல் சரியாக தொடராக வளர்த்துக்கொள்வதன் மூலம் நாட்டுக்கு அவசியமான சமூகமொன்றை கட்டியெழுப்ப முடியும் என்று தெரிவித்த அவர், 18 வயது பூர்த்தி அடைந்த இலங்கையர் அனைவருக்கும் வாக்குரிமை காணப்படுவதாகவும், நாடளுமன்றம், மாகாண சபை மற்றும் உள்ளூர் அதிகாரசபைகளுக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்யும் போது எவ்வாறான பண்புகளை கொண்டவர்களைத் தெரிவு செய்ய வேண்டும் என்பது தொடர்பிலும் ஜனநாயகம், சமாதானம், அகிம்சை தொடர்பான கருத்துக்கள் உட்பட பல விடயங்களை இதன்போது தெரிவித்தார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X