Thipaan / 2017 ஏப்ரல் 07 , மு.ப. 05:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை, மொறவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டி -01 பகுதியில், வன இலாகா அதிகாரியைத் தாக்கியதாகக் கூறப்படும் மூன்று பேரை நேற்றிரவு (06) கைது செய்துள்ளதாக, மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
பன்குளம் டி 01 பகுதியில் சட்டவிரோதமான முறையில் மரங்கள் வெட்டப்படுவதாகக் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அங்கு சென்ற வன இலாக்கா அதிகாரியுடன், ஏற்பட்ட வாக்கு வாதம் கைகலப்பாக மாறியதாகவும் தெரியவருகிறது.
தாக்குதலுக்குள்ளான வன இலாகா அதிகாரியான தினேஷ் ரொஷாந்த (37 வயது) திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதல் நடத்திய மூவரையும் கைது செய்துள்ளதாகவும் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவம் மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago