Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
எஸ். சசிக்குமார் / 2019 ஜனவரி 23 , பி.ப. 02:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை வர்த்தக, கைத்தொழில் சம்மேளனத்துக்கு இடைக்காலத் தடை உத்தரவு விதித்து, திருகோணமலை மாவட்ட நீதவான் எம்.முகைதீன் தீர்ப்பளித்தார்.
திருகோணமலை, குளக்கோட்டம் மண்டபத்தில் 2018.10.19 அன்று நடத்திய பொதுக்கூட்டமும், புதிய இயக்குநர் சபைத் தெரிவும் முறையற்றதெனத் தெரிவித்து, 10 பேர் கொண்ட அங்கத்தவர்கள், திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் வழக்கொன்றைத் தாக்கல் செய்திருந்தனர்.
இவ்வழக்கு, நேற்று (22) விசாரணைக்கு வந்தபோது, வழக்கை விசாரித்த மாவட்ட நீதவான், திருகோணமலை மாவட்ட வர்த்தக, கைத்தொழில் சம்மேளனத்தின் புதிய இயக்குநர்கள் இயங்குவதற்கு இடைக்கால உத்தரவு பிறப்பித்ததோடு, 6 பேர் கொண்ட இடைக்கால இயக்குநர் குழுவொன்றையும் ஏற்படுத்தினார்.
புதிய இயக்குநர்களில் மூவரும் வழக்குத் தாக்கல் செய்தவர்களில் மூவரும் உள்ளடங்களாகவே, 6 பேர் கொண்ட இடைக்கால இயக்குநர் குழுவை நீதவான் நியமித்தார்.
மீண்டும் புதிய இயக்குநர் தெரிவுக்கான வாக்கெடுப்பு, நீதிமன்றக் கண்காணிப்பில் பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி காலை 10 மணி முதல் மாலை 3 மணிவரை நடத்துவதற்கும் நீதவான் ஆணை பிறப்பித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
20 minute ago
35 minute ago
2 hours ago