Thipaan / 2015 டிசெம்பர் 18 , மு.ப. 10:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
கடந்த எட்டு வருடங்களுக்கு முன்னர், திருகோணமலை நொச்சிக்குளம் பகுதியில் இளம் பெண்ணொருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியமை தொடர்பான வழக்குடன் சம்பந்தப்பட்ட சந்தேகநபரை, ஜனவரி மாதம் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிவான் நீதிமன்ற நீதவான் சசிமகேந்திரன், வியாழக்கிழமை (17)உத்தரவிட்டார்.
மொறவௌ மஹதிவுல்வௌ பகுதியைச் சேர்ந்த அய்யம்பிள்ளை ஆறுமுகம் என்பவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவர், பல வழக்குகளுக்கு சமுகமளிக்காததாலேயே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நொச்சிக்குளம் பகுதியில் கடந்த 2007ஆம்ஆண்டில், தணிமையில் இருந்த இளம் பெண்ணை பாலியல் வல்லுறக்குட்படுத்தியதாக, மொறவேவ பொலிஸாரினால் குறித்த சந்தேக நபருக்கெதிராக திருகோணமலை நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு நடைபெற்று வந்தது.
இந் நிலையில் குறித்த சந்தேகநபர் பல வழக்குகளுக்கு சமுகமளிகாது இருந்தமையால் மொறவௌ பொலிஸார் கைது செய்து திருகோணமலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.
குறித்த சந்தேக நபருக்கு இருபத்தைந்தாயிரம் ரூபாய் தண்டப்பணமும் ஒரு இலட்சம் ரூபாய் சரீரப்பிணையும் விதித்த நீதவான், இருவர் கையொப்பமிடும் வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
24 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
3 hours ago