Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2021 செப்டெம்பர் 22 , மு.ப. 11:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம், ஏ.எம்.ஏ.பரீட்
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பலகாமம் - கிண்ணியா பிரதான வீதி, ஏழு புளியடி சந்தியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் ஆண் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்
இவ்விபத்து, நேற்று (21) மாலை இடம்பெற்றுள்ளது.
கிண்ணியா, கங்கை பகுதியிலிருந்து அநுராதபுரத்துக்கு மண் ஏற்றிச் சென்ற டிப்பர், ஆயிலியடில் இருந்து கிண்ணியாவை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளும் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்றவரே ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்
உயிரிழந்தவர், கிண்ணியா, நடுத் தீவைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 45 வயதுடைய அலிமுகான் அன்வர்கான் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம், கிண்ணியா தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
டிப்பர் வாகன சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
17 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago