Editorial / 2021 செப்டெம்பர் 15 , பி.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம்
2020ஆம் ஆண்டு பட்டதாரி பயிலுனர்களாக நியமிக்கப்பட்ட பட்டதாரிகளை உடன் நிரந்தர நியமனம் வழங்க வேண்டுமென திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார் .
கிண்ணியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (14) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே, இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், “ஒரு வருடத்துக்கு பின்னர் நிரந்தர நியமனம் வழங்கப்படுவதாகக் கூறப்பட்ட போதிலும் மேலும் ஆறு மாதங்கள் நீடித்திருப்பது பட்டதாரிகளுக்கு கஷ்டத்தை ஏற்படுத்தும்.
“அவர்களுக்கான கொடுப்பனவு தற்போது 20 ஆயிரம் ரூபாயே வழங்கப்படுகிறது. இதனையும் நேர காலத்தோடு சில செயலகங்களில் வழங்கப்படுவதில்லை. 10ஆம் திகதிக்குள் வழங்க வேண்டும் என்ற நிலை இருந்தாலும் கால நீடிப்புச் செய்வதுமாக இருக்கிறது. தற்போதை நிலையில், நிரந்தர நியமனத்தை குறைந்தது மூன்று மாதமாவது நீடித்து வழங்க வேண்டும்” என்றார்.
3 hours ago
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
9 hours ago