2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

வாழ்வாதாரத்தை மேம்படுத்தல்

Editorial   / 2022 ஜனவரி 24 , பி.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர்

வாழ்வாதார அபிவிருத்தி வேலைத் திட்டத்தை மேம்படுத்தும் நோக்கிலான பயிற்சிநெறி, சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் தம்பலகாமம் பிரதேச சமுர்த்தி கிளையின் ஏற்பாட்டில், பிரதேச செயலக மண்டபத்தில் இன்று (24) இடம்பெற்றது.

இச்செயலமர்வில் கால்நடை வளர்ப்பாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தல், பொருளாதார அபிவிருத்திக்கு முன்னெடுத்தல் உட்பட பல பயிற்சிகள் வழங்கப்பட்டன.

அத்துடன், 35 பயனாளிகளுக்கு 64 இலட்சம் ரூபாய் பெறுமதியான காசோலைகளும் பகிர்ந்தளிக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி, உதவிப் பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், சமுர்த்தி தலைமை முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சித்திக் மற்றும் பயனாளிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X