2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

விசேட சந்திப்பு

Editorial   / 2019 ஏப்ரல் 30 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்   

திருகோணமலை கந்தளாய் நகரிலுள்ள வர்த்தகர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையிலான விசேட சந்திப்பு, கந்தளாய் பொலிஸ் நிலையத்தின் கேட்போர் கூடத்தில், நேற்று முன்தினம் (29) நடைபெற்றது.

கந்தளாய் தலைமையகப் பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.விஜயசிறி தலைமையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், கந்தளாய் நகரிலுள்ள நூற்றுக்குக்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் கலந்துகொண்டார்கள்.

சந்தேக நபர்கள், அறிமுகமில்லாதவர்கள் நகரில் நடமாடினால் தகவல்கள் வழங்குதல்,  முஸ்லிம் பெண்கள் புர்கா அணிந்து செல்லக்கூடாது, வேறு பிரதேசங்களிலிருந்து வந்து  கந்தளாயில் தங்கினால், கந்தளாய் பொலிஸில் பதிய வேண்டும் போன்ற விடயங்கள் தொடர்பில், பொலிஸார் இதன்போது நகர வர்த்தகர்களுக்கு அறிவுறுத்தினர்.

இச்சந்திப்பில்,  வர்த்தகர்களும் தங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் முன்வைத்தார்கள்.

இதில் கந்தளாய் வலயத்துக்கான பொலிஸ் அத்தியட்சகர் பிரியங்கர த சில்வா, உதவி பொலிஸ் அத்தியட்சகர் கமால் ரணவீர உட்பட பலரும் கலந்துகொண்டார்கள்.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X