2025 மே 01, வியாழக்கிழமை

‘விசேட தேவையுடைய மாணவர்களுக்கு தனியான கல்வி அலகு வேண்டும்’

வடமலை ராஜ்குமார்   / 2019 செப்டெம்பர் 11 , பி.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

விசேட தேவையுடைய மாணவர்களுக்கான தனியான கல்வி அலகு ஒன்றை ஆரம்பிக்குமாறு, தம்பலகாமம் விசேட தேவையுடைய மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

தம்பலகாமம் பிரதேசத்தில் உள்ள சுமார் 06 கிராமங்களைச் சேர்ந்த 16 மாணவர்கள் இப்பகுதியில் கல்வி கற்கக் கூடிய வயதெல்லையில் உள்ள போதும் தாம் வாழுகின்ற பிரதேசத்தில் ஒரு விசேட தேவையுடைய பிரிவு இல்லாத காரணத்தால், 25 கிலோமீற்றருக்கு அப்பால் உள்ள திருகோணமலை நகரப் பாடசாலைகளில் கல்வி கற்பதற்காக இணைத்திருந்தனர்.

இருப்பினும், காலப்போக்கில் அவ்வளவு தூரம் மாணவர்களைத் தொடர்ச்சியாக கொண்டுசெல்வற்குப் போக்குவரத்துப் பிரச்சினை காரணமாக, இம்மாணவர்களில் அதிகமானவர்கள் இடைவிலகலாகக் காணப்படுகின்றனர்.

கல்வி கற்க வேண்டிய வயதில் உள்ள விசேட தேவையுடைய மாணவர்களின் கல்வி உரிமையை வழங்க வேணடியது சம்மந்தபட்ட திணைக்களத்தின் கடமை. எனவே, தாம் வாழும் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் விசேட தேவையுடைய மாணவர்களின் அலகு ஒன்றை ஆரம்பித்து, இம்மாணவர்களின் கல்வி உரிமையை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, சம்மந்தப்பட்ட திணைக்கள அதிகாரிக்கு பெற்றோர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .