ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2019 பெப்ரவரி 20 , பி.ப. 03:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

சுற்றுலா வரும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றலாப் பயணிகளுக்குச் சிறந்த சேவைகளை வழங்கும் முகமாக, திருகோணமலையில் சுற்றுலா விடுதி உரிமையாளர்களின் சங்கமொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
இச்சங்கத்தின் ஆரம்ப வைபவம், திருகோணமலை மூன்றாவது மைல் கல்லில் அமைந்துள்ள மாக்கோசா பே விடுதியில் நேற்று (19) மாலை இடம்பெற்றது.
இதில் திருகோணமலையில் இயங்கும் 52 உல்லாச விடுதிகளின் உரிமையாளர்கள் கலந்துகொண்டு நிர்வாகத்தைத் தெரிவுசெய்தனர்.
தலைவராக ஆர். நித்திதரன், உப தலைவராக என். திருப்பதிதுரை, செயலாளராக சந்தியா பிரியதர்ஷினி, பொருளாளராக கே. நேமிநாதன், பொதுத் தொடர்பு அலுவலகராக பி. புஸ்ராஜன், தொடர்பாடல் பணிப்பாளராக ஸ்ரீசக்தீபன் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.
திருகோணமலை மாவட்டத்தில் சுமார் 89 உல்லாச விடுதிகள் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .