2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

விபத்தில் ஆசிரியை பாமதி பலி; கணவன், மகன் படுகாயம்

Princiya Dixci   / 2021 ஜூலை 26 , பி.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

அ.அச்சுதன், தீஷான் அஹமட்,  எப்.முபாரக்

திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியின் சேருநுவர பகுதியில் நேற்று (25) இடம்பெற்ற வாகன விபத்தொன்றில், திருகோணமலையைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் பலியாகியுள்ளார்.  

அத்துடன், அவரது கணவர் மற்றும் 7 வயதான மகன் படுகாயமடைந்த நிலையில், கணவர் மூதூர் வைத்தியசாலையிலும், மகன் திருகோணமலை வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்தில் திருகோணமலை, பாலையூற்று சென்லூட்ஸ் வித்தியாலய ஆசிரியை திருமதி பாமதி ஞானவேல் (வயது 49) என்பவரே உயிரிழந்துள்ளார். 

ஓட்டோவில் வெருகல் முருகன் கோவிலுக்குச் சென்று வீடு திரும்பியபோது, கார் ஒன்று கட்டுப்பாட்டை மீறி, ஓட்டோவின் மீது மோதியதால் இந்த பரிதாபகரமான விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X