2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

விபத்தில் பிரதேச சபை உறுப்பினர் காயம்

ஏ.எம்.ஏ.பரீத்   / 2019 ஓகஸ்ட் 18 , பி.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

திருகோணமலை, தம்பலகாமம் பிரதேச சபை பெண் உறுப்பினர் ஒருவர், இன்று (18) இடம்பெற்ற ஓட்டோ விபத்தில் படுகாயமடைந்து, திருகோணமலை பொது வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தம்பலகாமம் பிரதேச சபை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்  பெண் உறுப்பினர் எஸ்.பரீதா என்பவரே, இவ்வாறு காயமுற்றவராவர்.

இவர், தம்பலகாமம் பிரதேச அபிவிருத்தி தொடர்பாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கை சந்திப்பதற்காக ஓட்டோவில் பயணித்த போது, வேகக் கட்டுப்பாட்டை இழந்து ஓட்டோ குடைசாய்ந்தமையால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .