2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

வீடற்றவர்களுக்கு நேர்முகத்தேர்வு

தீஷான் அஹமட்   / 2019 ஜனவரி 14 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய வீடமைப்பு அதிகார சபையால், மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் வீடற்றவர்களுக்கு வீடமைப்புத் திட்டம் விரைவில் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளது.

இதற்கான பயனாளிகளைத் தெரிவு செய்வதற்கான நேர்முகப் பரீட்சை, தோப்பூர் உப பிரதேச செயலகத்தில், மூதூர் பிரதேச செயலாளர் எம்.முபாரக்  தலைமையில் இன்று (14) காலை இடம்பெற்றது.  

இவ் வீடுகள், மானிய அடிப்படையில் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளதாகவும் முதற்கட்டமாக தோப்பூர் உப பிரதேச செயலகத்துக்குட்பட்ட 12 கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு  இவ் நேர்முகப் பரீட்சை இடம்பெற்றதாகவும் ஏனைய கிராம சேவகர் பிரிவுகளுக்கு அடுத்த கட்ட நேர்முகத் தேர்வு இடம்பெறுவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மூதூர் பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

இவ் நேர்முகத்தேர்வில் அவர்களது குடும்பப் பிண்ணணியை அடிப்படையாக வைத்து புள்ளிகள் வழங்கப்பட்டு, வீட்டுத் திட்டம் கொடுப்பதற்குப் பயனாளிகள் தெரிவு செய்யப்படுவார்கள் எனவும், இதில் எந்தவிதப் பக்கசார்பும் இடம்பெற மாட்டாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X