Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 ஜூலை 26 , மு.ப. 11:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.எல்.நௌபர்
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையால், மூதூர்-பள்ளிக்குடியிருப்பு, மரவட்டக்குளம் எனும் இடத்தில், மானிய அடிப்படையில் 50 வீடுகள் அமைத்துக்கொடுக்கப்படவுள்ளன.
இவ்வீட்டுத் திட்டத்துக்கான பயனாளிகளைத் தெரிவு செய்து வீடுகளை வழங்குவதற்கான நேர்முகத்தேர்வு, தோப்பூர் உப பிரதேச செயகத்தில், உதவிப்பிரதேச செயலாளர் எம்.பி.எம்.முபாரக் தலைமையில், இன்று (26) நடைபெற்றது.
இதில் அதிகளவானோர் கலந்துகொண்டனர். அமைத்துக்கொடுக்கப்படும் ஒவ்வொரு வீடும், 750,000 ரூபா பெறுமதிகொண்டவை என்றும் இதற்குரிய காணிகளும் இலவசமாக மூதூர் பிரதேச செயலகத்தால் வழங்கப்படவுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதில் உதவி பிரதேச செயலாளர் எம்.பி.எம்.முபாரக், நிர்வாக கிராம சேவையாளர் கே.எம்.எம்.ஜறூஸ், வீடமைப்பு உத்தியோகத்தர் தஜிதரன், உரிய பிரிவு கிராம சேவையாளர் உட்பட பல அதிகாரிகள் நேர்முகத்தேர்வுகளை மேற்கொண்டனர்.
திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரட்ண சிங்கத்தின் வேண்டுகோளின் பிகாரம், வீட்டுத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago