எப். முபாரக் / 2017 டிசெம்பர் 21 , பி.ப. 02:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை கந்தளாய் பிரதேச சபைக்குட்பட்ட பேராறு இரண்டாம் குலனிக்குட்பட்ட பிரதான வீதியில் போக்குவரத்துகள் மேற்கொள்ள முடியாத நிலையில் பிரதேச மக்கள் பல அசௌகரியங்களை மேற்கொண்டு வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.
கந்தளாய், பேராறு முதலாம் குலனியையும், இரண்டாம் குலனியையும் பிரிக்கும் இவ்வீதி, நீண்ட காலமாக செப்பனிடப்படாததால் பள்ளமும் படுகுழியும், நிறைந்து காணப்படுவதோடு, மழைகாலங்களில் சேரும், சகதியும் நிறைந்ததாக காணப்படுகின்றது.
இவ்வீதி, பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள், பயணிகள் எனப்பலரும் நாளாந்தம் போக்குவரத்துச் செய்யும் பிரதான வீதியாகும்.
இவ்வீதியை செப்பனிட்டுத் தருமாறு, கந்தளாய் பிரதேச சபையின் செயலாளரின் கவனத்துக்கு கொண்டு சென்றும் இதுவரை எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லையென, பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது மழை காலமாகையால், வீதி வழுக்கும் நிலையிலுள்ளது.
எனவே, சம்பந்தபட்ட அதிகாரிகள் கவனத்தில் எடுத்து, இவ்வீதியைப் புனரமைத்துத் தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
10 minute ago
11 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
11 minute ago
1 hours ago