2025 மே 02, வெள்ளிக்கிழமை

வெடிபொருள்கள் மீட்பு

அப்துல்சலாம் யாசீம்   / 2019 ஓகஸ்ட் 29 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, மொறவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 10ஆம் கட்டைப் பகுதியில் நேற்று (28) மாலை வெடிபொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

இதே பகுதியிலிருந்த விமானப்படைக்குச் சொந்தமான படைமுகாம் 04 வருடங்களுக்கு இந்த இடத்திலிருந்து அகற்றப்பட்டு, வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையிலேயே, இவ்வாறு  ஒருதொகை வெடிபொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன என, மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், மொறவெவ பொலிஸ் நிலையத்துக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து கண்டெடுக்கப்பட்ட இந்த வெடிபொருள்களைச் செயலிழக்கச் செய்யும் நடவடிக்கைக்காக, திருகோணமலை நீதிமன்றில் “பி“ அறிக்கையொன்றைச் சமர்ப்பித்து, அனுமதி கிடைக்கப் பெற்றதை அடுத்து, இதனைச் செயலிழக்கச் செய்யவுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .