2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

வெடிபொருள் மீட்பு

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 30 , மு.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்

திருகோணமலை, வில்கம் விகாரப் பிரதேசத்திலுள்ள பற்றையொன்றில் மறைத்துவைக்கப்பட்டிருந்த ஒருதொகுதி வெடிபொருள்களை நேற்று வியாழக்கிழமை மீட்டுள்ளதுடன், சந்தேக நபர் ஒருவரையும் கைதுசெய்துள்ளதாக விசேட அதிரடிப்படையின் பிரதம பொலிஸ் பரிசோதகர் நுவான் சமிந்த தெரிவித்தார்.

வெடிபொருள்களுடன் சந்தேக நபர் உப்புவெளி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டு அங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

இதன்போது உயர் வெடிமருந்து 1.5 கிலோகிராம், டெட்டனேற்றர் 182,  1820 அடி நீளம் கொண்ட டெட்டனேற்றர் வயர், அமோனியம் நைற்றஜன் 101 கிலோகிராம் ஆகியவற்றை மீட்டதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .