Niroshini / 2015 ஒக்டோபர் 15 , மு.ப. 10:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நஹீம் முஹம்மட் புஹாரி
சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீணாக்கேணி கிராமத்தில் இன்று வியாழக்கிழமை பன்றிக்கு வைக்கும் வெடி பொருள் ஒன்று வெடித்ததில் இரண்டு சிறுவர்கள் படுகாயமடைந்த நிலையில் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்திரசேகரன் குமரன் (வயது 13),சிவபால் விதுஸ்கன்(வயது 13) ஆகிய சிறுவர்களே இவ்வாறு படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
குறித்த இரண்டு சிறுவர்களும் பாடசாலை விட்டு வரும் வழியில் வீதியில் கிடந்த உருளை வடிவிலான பொருளொன்றை எடுத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்று எறிந்து விளையாடிய போதே அது வெடித்துள்ளது.
இதில் படுகாயங்களுக்குள்ளான சிறுவர்கள் தோப்பூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் மேலதிக சிகிச்சைகளுக்காக மூதூர் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
6 hours ago
6 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
8 hours ago
8 hours ago