2025 மே 19, திங்கட்கிழமை

விபத்துக்களில் மூவர் படுகாயம்: சாரதி கைது

Gavitha   / 2016 ஓகஸ்ட் 08 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுர்தீன் சியானா

திருகோணமலை நகரை அண்மித்த விலாங்குளம் மற்றும் உவர்மலை பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில் இன்று திங்கட்கிழமை  (08) காலை திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.

தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உவர்மலைப் பகுதியிலுள்ள பெற்றோல் நிரப்பும் இடத்துக்கு அருகில் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் -முச்சக்கர வண்டி மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் விபத்து சேவைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலை-அபயபுர இல -29 இல் வசித்து வரும் சிரோமாலி அதுகோரல (34 வயது) என்ற பெண்ணே இந்த விபத்தினால் படுகாயமடைந்துள்ளார்.

இந்த விபத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில், முச்சக்கரவண்டியின் சாரதியை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை கன்தயாய் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகியதால் விலாங்குளம்-கண்டி வீதி இலக்கம் 61ஃ25 இல் வசித்து வரும் எஸ்.சுப்பரமணியம் (54 வயது) மற்றும் அவரது மகனான எஸ்.சசிகுமார் (17 வயது)  ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.

இவ்விபத்துக்கள் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X