2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

விபத்தில் இருவர் உயிரிழப்பு; பஸ் சாரதி சரண்

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 25 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்,நஹீம் முஹம்மட் புஹாரி

திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  முத்துச்சேனைச் சந்தியில் சனிக்கிழமை (24) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற வெருகல், சூரை நகர்க் கிராமத்தைச் சேர்ந்த கனகசிங்கம் புஸ்பகலா (வயது 51) மற்றும் நற்சிங்கம் கையிலைநாதன் (வயது 38) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஈச்சிலம்பற்றிலிருந்து வெருகல் முகத்துவாரத்துக்கு சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் உல்லாசப் பயணிகள் சென்றுகொண்டிருந்த பஸ்ஸும் மோதி விபத்துக்குள்ளானது.

இவர்கள் இருவரும் வெருகல் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தைத் தொடர்ந்து, மேற்படி  பஸ் சாரதி பொலிஸில்  சரணடைந்துள்ளார்.

இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .