Thipaan / 2016 ஜூன் 12 , மு.ப. 04:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுர்தீன் சியானா
கோமரங்கடவெல -இந்திக்கட்டுவௌ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த இருவர், திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, கோமரங்கடவெல பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்துக்குள்ளான போது, இருவரும் மதுபோதையில் இருந்ததாகவும் மோட்டார் சைக்கிளை கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்தநபர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் மதுபோதையில் சென்று கொண்டிருந்தபோது, மாட்டுடன் மோதியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்றிரவு (12) இடம்பெற்ற இவ்விபத்தில், எஸ்.ரேமன் (43 வயது) மற்றும் ஆர்.ரணதுங்க (38 வயது) ஆகியோரே படுகாயமடைந்துள்ளனர்.
1 hours ago
7 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
7 hours ago
09 May 2026