Niroshini / 2015 ஒக்டோபர் 18 , மு.ப. 04:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

-நஹீம் முஹம்மட் புஹாரி
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர்-மனைச்சேனை பிரதேசத்தில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயங்களுக்குள்ளாகி கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மூதூர் , கங்குவேலி பிரதேசத்தைச் சேர்ந்த சாமசுந்தரம் கங்கா(வயது 24) என்ற இளைஞன் சிகிச்சை பலனின்றி இன்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் மோட்டார் சைக்கிளில் தனது வீட்டுக்குச் சென்று கொண்டிருக்கும் வீதியின் குருக்கே நாய் ஒன்று சென்றதனால் அவர் மோட்டார் சைக்கிளை மறு திசைக்கு திருப்ப முற்பட்ட போது மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி மின் கம்பத்துடன் மோதியுள்ளது.
இதில் படுகாயமடைந்த குறித்த இளைஞன் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக கண்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுபோது,சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
8 hours ago
8 hours ago
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
23 Mar 2026
23 Mar 2026