2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

விபத்தில் ஒருவர் காயம்

Kanagaraj   / 2015 செப்டெம்பர் 26 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்                   

திருகோணமலை கந்தளாய் 96ஆம் கட்டைப் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் பஸ்யொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளார்.

இவ்விபத்து இன்று சனிக்கிழமை(26) காலை  இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.    

கந்தளாயில் இருந்து தம்பலகமம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் எல்.ஜி.குமார வயது (46)என்ற பொலிஸ் உத்தியோகத்தரே பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளதாக தம்பலகமம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கப்பல்துறை ஆடைத் தொழிற்சாலையில் கடமையாற்றும் ஊழியர்களை ஏற்றச் சென்ற பஸ்சும் கந்தளாயில் இருந்து தம்பலகமத்துக்குச் கடமைக்குச் மோட்டார் சைக்கிளில் சென்ற பொலிஸ் உத்தியோகத்தருமே இவ்வாறு கந்தளாய் 96ஆம் கட்டைப்பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளார்கள்.

பஸ்ஸின் சாரதியை கைது செய்து தடுத்து வைத்து விசாரணைகள் மேற்கொண்டு வருவதாக தம்பலகமம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .