2025 மே 19, திங்கட்கிழமை

விபத்தில் டிப்பர் சாரதி காயம்

Thipaan   / 2016 ஓகஸ்ட் 08 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீசான் அஹமட்

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூதூர் நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சீமெந்து லொறி ஒன்றுடன், பின்னால் வந்த ரிப்பர் வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில், ரிப்பர் வாகனச் சாரதி சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலையிலிருந்து மட்டக்களப்புக்கு சீமெந்து ஏற்றி வந்த லொறிச் சாரதி, லொறியினை நிறுத்தி வைத்து விட்டு கடையொன்றுக்கு சென்ற வேளையில், பின்னால் வந்த ரிப்பர் வாகனம் மோதியுள்ளதாக பொலிஸ் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இன்று (08 ) காலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மூதூர் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X