2026 மார்ச் 23, திங்கட்கிழமை

வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி பண மோசடி செய்தவருக்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 08 , மு.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எப்.முபாரக் 

வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி ஏழு பேரிடம், நான்கரை இலட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்த நபரொருவரை, எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் ஹயான் மீ ஹககே, திங்கட்கிழமை (07)உத்தரவிட்டுள்ளார்.     

திருகோணமலை, கிண்ணியா மற்றும் மூதூர் ஆகிய பகுதிகளிலுள்ள ஏழு பேரிடம், மத்திய கிழக்கு நாடுகளுக்கு கூடிய சம்பளத்துக்கான வேலைகளுக்கு அனுப்புவதாகக் கூறி, நான்கரை இலட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்து தலைமறைவானதையடுத்து குறித்த ஏழு பேரும் அந்தந்த பொலிஸ் நிலையங்களில் செய்த முறைப்பாட்டையடுத்து கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இடிமன் பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர், ஞாயிற்றுக்கிழமை (06) கைது செய்யப்பட்டார். 

திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் சந்தேகநபரை ஆஜர்படுத்திய போதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .