Sudharshini / 2015 டிசெம்பர் 08 , மு.ப. 05:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
'எதிர்காலத்தில் போதைப்பொருள் நுகர்வற்ற சமுதாயத்தை உருவாக்க அடுத்த தலைமுறையினராகிய மாணவர்கள் திடசங்கற்பம் எடுத்துக் கொள்ள வேண்டும்' என உதயம் மறுவாழ்வு அமைப்பின் பொதுச் செயலாளர் ஏ. சர்மிளா தெரிவித்தார்.
திருகோணமலை மெதடிஸ்த பெண்கள் கல்லூரி மாணவர்களுக்கு, உதயம் மறுவாழ்வு அமைப்பினால் போதைப்பொருள் பாவனையினால் ஏற்படும் தீங்குகள் குறித்து விழிப்புணர்வுச் செயலமர்வு திங்கட்கிழமை (07) இடம்பெற்றது. இதில் கலந்துக்கொண்டு விளக்கம் அளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்று நிருபத்திற்கு அமைவாக இந்த விழிப்புணர்வுச் செயலமர்வு முன்னெடுக்கப்பட்டது.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர்,
'குறிப்பாக ஆண்கள் மதுபோதைக்கு அடிமையாகி மனைவியரைத் துன்புறுத்துவதால் வீட்டிலுள்ள குழந்தைகள் பல்வேறு உடல் உளத் தாக்கங்களையும் நெருக்கடிகளையும் சந்திக்கின்றனர். இதனால் அவர்களது கல்வி பாதிப்படைகின்றது.
இறுதியில் பாடசாலைக் கல்வி இடைநிறுத்தப்பட்டு எதிர்காலமே பாழாய்ப்போன ஒரு நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகின்றார்கள்.
பாடசாலைச் சிறுவர்கள் போதைப்பொருள் பாவினையின் பின்னர் ஏற்படும் விளைவுகளால் எவ்வாறு பாதிக்கப்படுகின்றார்கள் என்பதை நாம் தற்போது கண்கூடாகக் கண்டு கொண்டிருக்கின்றோம்.
எனவே, இது பற்றி நாளைய தலைவர்களாகிய மாணவர்கள் இப்பொழுதிருந்தே விழிப்புணர்வைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
போதையற்ற சமூகத்தை உருவாக்கி அபிவிருத்தியைக் காண மாணவர்கள் திடசங்கற்பம் கொள்ள வேண்டும்' என்றார்.
உதயன் மறுவாழ்வு அமைப்பின் தலைவர் ஏ. செல்வேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அந்நிறுவனத்தின் பொதுச் செயலாளர் ஏ. சர்மிளா, இணைப்பாளர் ஐ. கிருஷாந்தி, பொருளாளர் எஸ். சாமிளா, உப தலைவர் சியாமளாதேவி சண்முகநாதன், உப தலைவர் என்.ஏ. கஜேந்திரன் உட்பட பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இச்செயலமர்வில் திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.
.jpg)

14 minute ago
23 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
23 minute ago
33 minute ago