2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

ஹஜ் கடமைக்கு செல்பவர்கள் மீள் பதியவும்

Princiya Dixci   / 2016 மே 11 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக் 

புனித ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்வதற்காக முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தில் 4,600 பேர் பதிவு செய்திருந்த போதிலும் 1,710 பேர் மட்டுமே மீள் பதிவு செய்துகொண்டுள்ளதாக திணைக்கள பணிப்பாளர் எம்.எச்.எம். சமீல் அறிவித்துள்ளார்.

இதேவேளை, இவ்வாண்டு ஹஜ்ஜுக்காக பதிவு செய்துள்ளவர்கள் தமது பெயரை மீள்பதிவு செய்துகொள்ள எதிர்வரும் 22ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்குவதற்கு முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் தீர்மானித்துள்ளதாகவும் முன் கூட்டியே தமது பெயர்களை மீள்பதிவு செய்து கொள்ளுமாறும் கேட்டுள்ளார்.

இம்முறை, இதுவரை 2,240 பேருக்கே ஹஜ் கோட்டா கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .