2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

ஹெரோய்னுடன் கைதானவருக்கு விளக்கமறியல்

Thipaan   / 2016 ஓகஸ்ட் 23 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுர்தீன் சியானா

திருகோணமலை, ஆண்டாங்குளம் பகுதியில் 630 மில்லிகிராம் ஹெரோய்னை தம்வசம் வைத்திருந்து விற்பனை செய்த  குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 05ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதிமன்ற நீதவான் டி.சரவணராஜா,  இன்று (23) உத்தரவிட்டார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர், திருகோணமலை, ஆண்டாங்குளம் 10 வீட்டுத்திட்ட வீதியைச் சேர்ந்த எஸ.ரோஹன குலதுங்க (42 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேசநபர், திருகோணமலை பிரதேசத்தில் ஹெரோய்ன் விற்பனை செய்து வருவதாக திருகோணமலை போதை வஸ்து தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து இச்சந்தேகநபரை சோதனை செய்தபோதே 630 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .