2025 மே 23, வெள்ளிக்கிழமை

'அனல் மின் நிலையத் திட்டத்தால் வாழ்வாதாரத்துக்கு பாதிப்பு'

Suganthini Ratnam   / 2016 ஏப்ரல் 07 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா

வாழ்வாதார மேம்பாட்டுக்காக தம்மால் செய்யப்பட்டுவந்த விறகு வெட்டுதல், தேன் எடுத்தல், வேட்டையாடுதல், விவசாயம் போன்ற  தொழில்கள் இந்த அனல் மின் நிலையம் அமைப்பதினால் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அதனை உடனடியாக நிறுத்த வேண்டுமெனவும்; சம்பூர் பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ள அனல் மின் நிலையத் திட்டத்தைக் கண்டித்து முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.

திருகோணமலை, மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சம்பூர் பிரதேசத்தில் அனல் மின் நிலையம் அமைக்கப்படவுள்ளதைக் கண்டித்து சந்தோசபுரம் கிறவட்குழி சிவசக்தி வித்தியாலயத்துக்கு முன்பாக இன்று வியாழக்கிழமை பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பசுமை திருகோணமலை அமைப்பு மற்றும் இலங்கை பழங்குடியினர் உரிமைகளுக்கான அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, 'நிலக்கரியை எரித்து எம்மை நோயாளி ஆக்காதே', 'எங்களின் விளை நிலங்களை நாசம் ஆக்காதே', 'எமது சூழலை பாதிக்கும் அனல் மின் நிலையத்தை ஆரம்பிக்காதே' உள்ளிட்டவை எழுதப்பட்ட பதாதைகளை பொதுமக்கள் தாங்கியிருந்தனர்.

ஆர்ப்பாட்ட இறுதியில் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோ ஊடாக ஜனாதிபதியிடம் கையளிப்பதற்கான மகஜர் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.நாகேஸ்வரனிடம் பசுமை திருகோணமலை அமைப்பினர் கையளித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X