2025 மே 15, வியாழக்கிழமை

'அரசாங்க அலுவலகங்களில் ஒருவர் செய்யும் வேலையை ஐவர் செய்கின்றனர்'

Suganthini Ratnam   / 2017 ஏப்ரல் 25 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்

முன்னாள்; ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் பட்;டதாரிகள் 42,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கிய நிலையில், அரசாங்க அலுவலகங்களில் ஒருவர் செய்ய வேண்டிய வேலையை 5 பேர் செய்யும் நிலைமை தற்போது உருவாகியுள்ளது எனக்  கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் தெரிவித்தார்.

இதன் காரணமாகப் பொதுமக்களின் நிதி விரயம் செய்யப்படுகின்றது எனவும் அவர் கூறினார்.

கிழக்கு மாகாண சபையின்  அமர்வு இன்று (25) நடைபெற்றபோது, வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பான அவசரப் பிரேரணை முன்வைக்கப்பட்டது. இந்தப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

பட்டதாரிகளில் உள்வாரிப் பட்டதாரிகள், வெளிவாரிப் பட்டதாரிகள்  என்று இரண்டு வகையான பட்டதாரிகள் உள்ளனர் எனத் தெரிவித்த அவர்,  வேலைவாய்ப்பின்போது பெரும்பாலனவர்கள் ஆசிரியத் தொழிலையே விரும்புகின்றனர் எனவும் கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்தபோது, 'எமது நாட்டில் வெளிவாரிப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டவர்களும் ஆசிரியத் தொழிலையே வேண்டி நிற்கின்றனர்.

பட்டதாரிகளுக்கு அரசாங்கம் வேலைவாய்ப்பு வழங்கும் என்பதால், வேறு எந்த முயற்சியும் இன்றி அரசாங்கத் தொழிலையே பட்டதாரிகள் எதிர்பார்த்துள்ளனர்.  

மேலும், எத்தனையோ பட்டதாரிகள்  தற்போது தனியார் கம்பனிகளில் உயர் பதவிகளில் உள்ளார்கள் என்பதையும் நாம் கவனத்திற்கொண்டு பார்க்க வேண்டும்' என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .