Niroshini / 2015 டிசெம்பர் 06 , மு.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்
அரசியல்வாதிகளின் பின்னால் இருப்பவர்களின் தொந்தரவு காரணமாகவே அவர்கள் கல்வி நிர்வாகத்தில் தலையிடுகிறார்கள்.அவர்கள் தலையிடுகின்ற விடயம் குறித்து கல்வி நிர்வாகிகள் விளக்கமளிக்கும்போது, அவற்றை ஏற்றுக் கொள்கின்ற தன்மை அரசியல்வாதிகளிடம் இருக்க வேண்டும்.இப்படியான அரசியல்வாதிகளை தான் கிண்ணியா பிரதேசம் கொண்டிருப்பது ஒரு முன்மாதிரியாகும் என கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.நசூகர்ஹான் தெரிவித்தார்.
நேற்று (5) நடைபெற்ற கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயத்தின் வருடாந்த சேவை நலன் பாராட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வித்தியாலய அதிபர் திருமதி என்.எஸ்.அமீன்வாரி தலைமையில் நடைபெற்ற இவ் விழாவில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
கல்வி அபிவிருத்திக்கு அரசியல்வாதிகளின் தலையீடும் பங்களிப்பும் முக்கியமாகும்.அதை யாரும் மறுக்க முடியாது.அரசியல்வாதிகளுக்கு பிரச்சினைகளைத் தெளிவுபடுத்தி உண்மை விடயங்களைத் எடுத்துக் கூறுகின்ற ஆற்றலும் ஆளுமையும் கல்வி அதிகாரிகளுக்கு இருக்க வேண்டும்.
நாட்டில் உள்ள 98 கல்வி வலயங்களில் கிண்ணியா பிரதேசம் கல்வி அபிவிருத்தியில் கடைசி நிலையில் இருக்கின்றதையிட்டு அனைவரும் கடுமையாக சிந்திக்க வேண்டிய நிலையில் இருக்கின்றோம்.எனவே, பிறக்கப்போகின்ற புத்தாண்டு எமக்கு சவாலாக அமையப் போகின்றது.அவற்றை வெற்றி கொள்வதற்கு கல்வி அதிகாரிகளோடு ஆசிரியர்களும் பெற்றார்களும் பல தியாகங்களைச் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
இதன்போது, 81 ஆசிரியர்களும் 10 கல்விசாரா ஊழியர்களும் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
55 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
1 hours ago
1 hours ago