Suganthini Ratnam / 2015 டிசெம்பர் 09 , மு.ப. 09:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்
யுத்த காலத்தில் காணாமல் போனோருக்காக காலம்; கடந்த இறப்புச் சான்றிதழ் பெறுவதற்காக விண்ணப்பிக்கும் கால அவகாசம் இம்மாதம் 31ஆம் திகதியுடன் முடிவடையவுள்ளதாக கிண்ணியா பிரதேசத்துக்கான மேலதிக மாவட்டப் பதிவாளர் ஆர்.சசிகுமார் தெரிவித்தார்.
காணாமல் போனோருக்கு இறப்புச் சான்றிதழ் பெற்றுக்கொடுக்கும் வகையில் உரியவர்களின் ஆவணங்களை பரிசீலிப்பதற்கான நடமாடும் சேவை, கிண்ணியா பிரதேச செயலகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்றபோதே, அவர் இதனைக் கூறினார்.
காணாமல் போனோரின்; விவரங்களைத் திரட்டி அவர்களுக்கு இறப்புச் சான்றிதழ் பெற்றுக்கொடுப்பதற்கு தேவையான விண்ணப்பப்படிவங்களை அவர்களின் உறவினர்களுக்கு வழங்க வேண்டியுள்ளது.
இறப்புச் சான்றிதழ் வழங்குவதாயின், இறந்தவரின் அடையாள அட்டை மற்றும் பிறப்புச் சான்றிதழ் அவசியமாகின்றன.
இதற்காக கிராம அலுவலர் ஊடாக காணாமல் போனோரின் உறவினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டும் குறைந்தளவானோரே, இன்றையதினம் வருகை தந்துள்ளனர். எனவே, இந்தக் குறுகிய காலத்துக்குள் இங்கே வருகை தந்தவர்கள் ஏனையோரை விழிப்பூட்டி, அவர்களது கிராம அலுவலர் ஊடாக இந்த விடயம் தொடர்பில் சந்திக்கச் செய்யுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவில் காணாமல் போனோர் தொடர்பாக 150 க்கும் மேற்பட்ட பதிவுகள் இருக்கின்றன. 20 பேரே இன்று வருகை தந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
10 minute ago
19 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
19 minute ago
29 minute ago