Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2016 ஜூன் 29 , மு.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீசான் அஹமட்
திருகோணமலை கந்தளாய் வலயக்கல்வி அலுவலகத்துக்குட்பட்ட மஹாவலிகம மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கின்ற மாணவர்களின் பெற்றோர், பாடசாலையில் நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்துதருமாறு கோரி நடத்திவரும் உண்ணாவிரதப் போராட்டம் 3ஆவது நாளாகவும் தொடர்ந்தது.
சேருநுவர மணிக்கூட்டுக் கோபுரத்துக்கு முன்பாக, திங்கட்கிழமை (27) காலை 8.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த உண்ணாவிரதப் போராட்டம் இன்றும் புதன்கிழமையும் (29)இடம்பெற்று வருகிறது.
உண்ணாவிரத போரட்டத்தில் ஈடுபட்டுவருவோரில், 36 மற்றும் 42 வயதுகளையுடைய இரு பெண்கள் சுகவீனமுற்று சேருநுவர பிரதேச வைத்தியசாலையில் இன்று (29) பகல் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.
இவ் உண்ணாவிரத போராட்டத்தினை முடிவுக்கு கொண்டுவரும் முகமாக பெற்றோருக்கும் கல்வித் திணைக்கள அதிகாரிகளுக்குமிடையிலான சந்திப்பொன்றினை ஏற்படுத்துவதற்கான முனைப்பில் ஈடுபட்டு வருவதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.
(படங்கள்: பதுர்தீன் சியானா)
48 minute ago
53 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
53 minute ago
1 hours ago
1 hours ago