Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Niroshini / 2017 பெப்ரவரி 12 , பி.ப. 02:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஒலுமுதீன் கியாஸ்
“திருகோணமலை மாவட்டத்தில் “நூற்றுக்கு 25 வீதமாகவர்களே உயர்தரப் பிரிவில் கல்வி கற்கின்றனர். அதில் 5 சதவீதமானவர்கள் மட்டுமே பல்கலைக்கழகம் செல்கின்றனர். இது எதிர்கால சமூக மாற்றத்துக்கு தடையாக அமையும்” என சுகாதார பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளரும் கிழக்கு மாகாண முன்னாள் தவிசாளருமான எச். எம் பாயிஸ் தெரிவித்துள்ளார்.
கண்டி பிரதேசத்தில் பாலர் பாடசாலையின் பெற்றோர்களுக்கு ஏற்பாடு செய்திருந்த வலுவூட்டல் செயலமர்வில் நேற்று கலந்துக்கொண்டு உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
கல்வி பொதுத்தராதர சாதாரண தரத்திலும் உயர் தரத்திலும் சித்தியடையாமல் வௌயேறும் மாணவர்களின் தொகை ஆண்டுதோரும் அதிகரித்து செல்கின்றது. இதற்கு முக்கிய காரணம் வறுமை,பெற்றோர்களுக்கு போதிய கல்வி அறிவின்மை ,சரியான வழிகாட்டல் இன்மை ஆகும்.
அத்துடன், இப்பகுதிகளில் சுற்றுலா தளமாக மாறி வருவதனால் மாணவர்கள் மத்தியில் ஒழுக்க சீர்க்கேடுகள் அதிகரித்து வருகின்றன.
ஆதலால், எதிர்கால சமூகம் எமது கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஒரு குழந்தை எதிர்காலத்தில் என்னவாக இருக்க போகின்றது என்பது நாம் வழங்கும் சேவைகளில் தான் தங்கியுள்ளது. அதாவது, குழந்தையின் எதிர்காலம் சமூகத்தின் கையிலே தான் தங்கியுள்ளது என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
3 hours ago
3 hours ago