2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

கசிப்பு வடித்தவர் கைது

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 20 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.யாசீம்

திருகோணமலை, பம்புறுகஸ்வௌப் பகுதியில் கசிப்பு வடித்துக்கொண்டிருந்த குற்றச்சாட்;டில் நேற்று திங்கட்கிழமை இரவு கைதுசெய்யப்பட்ட 36 வயதுடைய ஒருவர் பொலிஸ் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவரை எதிர்வரும் 23ஆம் திகதி திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பணிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சந்தேக நபரிடமிருந்து பரல் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன.

யான் ஓயா ஆற்றுக்கு அருகில் தொடர்ச்சியாக கசிப்பு வடிப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, அங்கு சுற்றிவளைப்பு மேற்கொண்டபோது, இந்த சந்தேக நபரை கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .