2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

'கூட்டமைப்பு பிரச்சினையை இழுத்தடித்துள்ளது'

Niroshini   / 2015 ஒக்டோபர் 18 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.யாசீம்

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதியை அணுகாமல் தமது சொந்த அரசியல் இலாபம் கருதி இப்பிரச்சினையை இழுத்தடித்துள்ளது என உலமா கட்சி தெரிவித்துள்ளது.

இது குறித்து அக்கட்சியின் தலைவர் கலாநிதி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளதாவது,

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் என்பது நீண்ட கால பிரச்சினையாகும். 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுற்று புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு என அறிவித்தவுடன் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் உள்ள அனைத்து கைதிகளும் விடுதலை செய்யப்பட்டிருக்க வேண்டும். இதனை கடந்த அரசு செய்யாமல் விட்டமை கவலைக்குரியது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்கும் முயற்சிகளுக்கு துணை போகும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்போது இப்பிரச்சினையை நிறைவேற்று  அதிகாரம் மூலம் உடனடியாக தீர்க்க சொல்வது ஆச்சர்யமாக உள்ளது.

ஆனாலும் இதனை அவர்கள் சரியான முறையில் ஜனாதிபதியிடம் அணுகாது தமது சொந்த அரசியல் இலாபத்துக்காக கைதிகளை பயன்படுத்துகிறார்கள்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதாக வாக்குறுதி அளித்தவர். இந்நிலையில் தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்துவது என்பது அவரது கொள்கைக்கு முரணானதாகவே அமையும் என்ற நியாயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த நிலையில் இப்பிரச்சினையை ஒரே இரவில் முடிக்கும் அதிகாரம் தனது கையிலிருந்தும் அதனை பாவிக்காமல் மூன்று வாரங்களில் இதற்கு நல்லதொரு தீர்வை வழங்குவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளமை உண்மையில் பாராட்டுக்குரிய விடயமாகும். 

இதனை கூட்டமைப்பு ஏற்று ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பதன் மூலம் இது விடயத்தில் நல்ல முடிவுக்கு வழிவகுக்க முடியும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .