Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2015 செப்டெம்பர் 29 , மு.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடமலை ராஜ்குமார்
சம்பூரில் மீள் குடியேற்றப்பட்ட குடும்பங்களில் தெரிவு செய்யப்பட்ட 134 குடும்பங்களுக்கு மலசல கூடம் அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கு.நாகேஸ்வரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
சம்பூரில் நேற்று திங்கட்கிழமை(28) இரவு பெய்த அடை மழையால் அப்பகுதியில் மீள் குடியேறிய மக்களின் தற்காலிக கொட்டில்களுக்குள் மழை நீர்புகுந்துள்ளது.இதனால் பல்வேறு அசௌகரியங்களை அப்பகுதி மக்கள் எதிர்நோக்க வேண்டியேற்பட்டது.
தற்காலிக கொட்டில்கள் அமைக்கும் பணியை அரச சார்பற்ற நிறுவனங்கள் பிரதேச செயலகம் மூலமாக 140 பேருக்கு வழங்கியுள்ளன.
அத்துடன், மலசல கூடம் அமைக்கும் பணியில் 134 குடும்பங்கள் உள்வாங்கப்பட்டுள்ள இந் நிலையில், இப்பணிகள் தற்போது முன்னெடுக்கபடுவதால் இவை அனைத்தும் இந்த வருடம் ஒக்டோபர் மாத இறுதிக்குள் நிறைவு செய்யப்பட வேண்டும். இல்லையேல் நிலத்தடி நீர் உயர்ந்து விடும்.இதனால், மலசல கூட குழிகளை அமைப்பதில் சிரமங்களை எதிர்நோக்க வேண்டிவரும்.
எனவே,இப்பணிகளை துரிதமாக முன்னெடுக்க வேண்டும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .