2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

காணி அனுமதிப்பத்திரங்களை வழங்குமாறு வேண்டுகோள்

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 11 , மு.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொன் ஆனந்தம்

திருகோணமலை, கப்பல்துறைக் கிராமத்தில் நீண்டகாலமாக காணி அனுமதிப்பத்திரங்கள் இன்றியுள்ள மக்களுக்கு காணி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்குமாறு கிராமிய அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

கப்பல்துறைக் கிராமத்தில் புனரமைக்கப்பட்ட பிரதான வீதியை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட கிழக்கு  மாகாணக்   காணி அமைச்சர்  ஆரியவதி கலப்பதியிடமும் மாகாணசபை உறுப்பினர் ஜெ.ஜனார்த்தனனிடமும் இந்த வேண்டுகோளை மேற்படி அமைப்புகள் முன்வைத்தன.

இதன்போது பொதுமக்கள் தெரிவிக்கையில், 'முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்தில் இக்கிராமத்தில் நாம் மீள்குடியேற்றப்பட்டோம்.  அப்போது, அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தித் தரப்பட்டன. இருப்பினும், நாம் குடியிருக்கும் இக்காணிகளுக்கு இதுவரையில் அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படவில்லை.
எனவே, நாம் குடியிருக்கும் இக்காணிகளுக்கு அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம்' என்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X