Niroshini / 2015 நவம்பர் 22 , மு.ப. 04:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ், எப்.முபாரக்,நஹீம் முஹம்மட் புஹாரி,ஏ.எம்.ஏ.பரீத்,பைஷல் இஸ்மாயில்
கிண்ணியா தள வைத்தியசாலையில் நிலவும் ஆளணி மற்றும் பௌதிக வள பற்றாக்குறைகளை அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் இயன்றளவு நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என பிரதி அமைச்சர் பைஷால் காசிம் தெரிவித்தார்.
குச்சவெளி,புல்மோட்டை,திருகோணமலை,கிண்ணியா,மூதூர்,தோப்பூர் மற்றும் கிளிவெட்டி பிரதேச வைத்தியசாலைகளுக்கு பிரதி அமைச்சர் தலைமையிலான குழு நேற்று சனிக்கிழமை விஜயம் செய்தது.இதன்போது அங்கு நடைபெற்ற வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினருடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மாவட்ட வைத்திய அதிகாரி எம்.எச்.சமீம் தலைமையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
எதிர்வரும் ஜனவரி மாதம் ஐந்து தாதியர்களும் எட்டு வைத்தியர்களும் இங்கு நியமிப்பதற்கு நடவடிக்கை மேற்கௌ்ளப்படும்.
மேலும், வைத்திய தளபாடங்களைக் கொள்வனவு செய்வதற்கு 45 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்யுமாறு மாகாண சுகாதார பணிப்பாளரைக் கேட்டுக்கொள்கின்றேன்.அத்துடன்,வெளிநோயாளர் பிரிவுக்காக கட்டடம் ஒன்றும் நிர்மாணித்துத் தரப்படும் என்றார்.
இங்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.நஸீர் கூறுகையில்,
2016ஆம் ஆண்டில் சகல வசதிகளையும் கொண்ட வைத்தியசாலையாக கிண்ணியா வைத்தியசாலை அபிவிருத்தி செய்யப்படும்.
திருகோணமலை மாவட்ட வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கு மத்திய அமைச்சில் இருந்து 30 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிணங்க,2016இல் சகல வசதிகளையும் கொண்ட வைத்தியசாலையாக கிண்ணியா வைத்தியசாலை அபிவிருத்தி செய்யப்படும்.இதற்காக மத்திய,மாகாண அமைச்சுக்களின் நிதி பெற்றுக்கொள்ளப்படும் என்றார்.
இந்த சந்திப்பை அடுத்து, கிண்ணியா மட்டக்களப்பு வீதியில் அமைந்தள்ள முன்னைய வைத்தியசாலைக் காணிக்குள் வைத்தியர்களுக்கான விடுதிக் கட்டடத்துக்காக அமைச்சர்களால் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.



44 minute ago
1 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
1 hours ago
3 hours ago
3 hours ago