Niroshini / 2015 செப்டெம்பர் 20 , பி.ப. 12:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எம்.ஏ.பரீத்
போக்குவரத்து சட்டங்களை உரிய முறையில் கடைபிடிக்கும் நோக்கில் எதிர்காலத்தில் கிண்ணியாவில் விசேட பொலிஸ் பிரிவொன்றை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
போக்குவரத்து சட்டங்களை மீறும் பிரதேசங்களுள் ஒன்றாக கிண்ணியா அடையாளம் காணப்பட்டுள்ளது.
குறிப்பாக தலைக்கவசம்,வாகன அனுமதிப்பத்திரம் இல்லாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டுதல், இரண்டுக்கும் மேற்பட்டோர் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தல், ஹெட்போன் மாட்டிக் கொண்டு பயணம் செய்தல், வீதி ஒழுங்குகளை கடைப்பிடிக்காது பயணம் செய்தல், பாதசாரிகளை மோதிவிட்டு தப்பி ஓடுதல் உள்ளிட்ட பல செயற்பாடுகள் குறித்து பொலிஸ் தலைமையகத்துக்கு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதுதொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்கும் வகையிலேயே எதிர்வரும் காலங்களில் விசேட பொலிஸ் பிரிவொன்றை கிண்ணியாவில் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026