Suganthini Ratnam / 2015 நவம்பர் 13 , மு.ப. 10:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டுள்ள ஹர்த்தாலை கருத்திற்கொண்டு தமிழ் அரசியல் கைதிகளின் நலனுக்காக நல்லாட்சி அரசாங்கம் சிறந்த முடிவை எடுக்க வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கி.துரைரெட்ணசிங்கம் தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு தெரிவித்த அவர், 'சிறைகளில் வாடுகின்ற தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றமை நியாயமானதே. அவர்களின் விடுதலை துரிதப்படுத்தப்பட வேண்டும்.
சிறைச்சாலைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பு மட்டுமன்றி, இதர சிறுபான்மைக் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. இன்றைய ஹர்த்தாலுக்குக் கூட சில சிறுபான்மைக் கட்சிகள் ஆதரவு தெரிவிக்கின்றன. இந்த நல்லாட்சியில் கைதிகளின் விடுதலைக்கு தீர்க்கமான முடிவு எடுப்பதற்கு நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.' என்றார்.
45 minute ago
1 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
1 hours ago
3 hours ago
3 hours ago