George / 2016 ஜனவரி 16 , மு.ப. 06:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

அக்போபுர பகுதியில் 500 கிராம் கஞ்சாவை தம்வசம் வைத்திருந்த சந்தேகநபரை நேற்று வெள்ளிக்கிழமை (15) மாலை கைதுசெய்துள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர். அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கித்துல்ஊற்று பகுதியில் வைத்து குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபருக்கெதிராக கஞ்சா குற்றச்சாட்டு வழக்குகள் ஏற்கெனவே நீதிமன்றில் நடைபெற்று வருவதாகவும் அக்போபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
38 வயதுடைய குறித்த சந்தேகநபரை தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு இன்று சனிக்கிழமை(16) கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago