2025 ஜூலை 28, திங்கட்கிழமை

'கிழக்கின் எழுச்சி - 2016 கண்காட்சியை சம்பந்தன் திறந்துவைப்பார்'

Thipaan   / 2016 செப்டெம்பர் 15 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சசிக்குமார், பதுர்தீன் சியானா, பொன் ஆனந்தம்

கிழக்கின் எழுச்சி - 2016 எனும் தலைப்பில் நாளை 16ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை நடைபெறவுள்ள விவசாயக் கண்காட்சி, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனினால் வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

இது தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியளாளர் சந்திப்பு,  கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் கேட்போர் கூடத்தில், விவசாய அமைச்சர் துரைராஜசிங்கம் தலைமையில்

நேற்றுப் புதன்கிழமை (14)  மாலை 3.30 மணியவில் நடைபெற்றது. இக் கண்காட்சியானது திருகோணமலை சம்பூர் மகா வித்தியாலயத்தில் காலை 9.00 மணி தொடக்கம் மாலை 9.00 மணிவரை நடைபெறவுள்ளது.

இக் கண்காட்சியை விவசாயம், கால்நடை, மீன்பிடி, நீர்ப்பாசனம், கூட்டுறவுத்துறை ஆகிய 5 திணைக்களங்கள் இணைந்து நடாத்தவுள்ளன.

இக் கண்காட்சிக்கு பாடசாலை மாணவர்கள், விவசாயிகள், கைத்தொழில்களில் ஈடுபடுவோரை கலந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதற்கான தயார் படுத்தல் வேலைகள், சம்பூர் மகா வித்தியாலயத்தில் மூன்று மாதங்களுக்கு முன்னரே தொடக்கி வைக்கப்பட்டன. அங்கு விவசாய உற்பத்திகள் தொடக்கி வைக்கப்பட்டு பயன்தரு நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .