Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 மே 13 , மு.ப. 08:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடமலை ராஜ்குமார்
இலங்கையின் சமூக சுட்டியை பொறுத்தவரை மிகவும் சிறப்பாக இருக்கின்றது. ஏனெனில், யார் நாட்டை ஆண்டாலும் இலங்கையில் இலவசக் கல்வியும் இலவசச் சுகாதாரமும் வழங்கப்படுகின்றது. ஆயினும், போஷாக்குத் தொடர்பாக சில குறைபாடுகள் காணப்படுகின்றன. இதனால் வளர்ச்சித்தடை, வளர்ச்சி தேய்வடைதல், எனிமியா தாக்கம் போன்ற குறைபாடுகள் காணப்படுகின்றன. இதனை சீர்;செய்யவே ஜனாதிபதியால் தேசிய போஷாக்கு செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் நாளக்க களுவௌ தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை பல்துறை சார் போஷாக்கு எனும் தலைப்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'போஷாக்குத் தொடர்பான செயலணிகளை மாகாண மட்டத்திலும் மாவட்ட மட்டத்திலும் பிரதேச செயலக மட்டத்திலும் கிராமிய மட்டத்திலும் செயலணியாக செயற்படுத்துவதன் மூலம் ஒவ்வொரு குடும்பத்திலும் காணப்படுகின்ற பிரச்சினைகளையும்; மருத்துவமாது மற்றும் வைத்தியர்களின் உதவியுடன் தீர்க்க முடியும். இதுவே தற்போது மிக முக்கியமாக நாம் மேற்கொள்ள வேண்டிய பணியாகும். இவ்வாறு பல்துறைசார் சக்திகளையும் ஒன்று திரட்டி பெற்று அதன் மூலம் இலங்கையில் நிலவி வரும் போஷாக்கு தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு பெறுவோம்' என்றார்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago